சம்பந்தனின் பாதுகாப்பு வாகனம் குறித்து சபையில் கேள்வி

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்படுகின்ற குறைந்தளவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இந்தக்கேள்வியை எழுப்பினார். சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனம், அவரின் பாதுகாப்புக்கு ஏற்றது அல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்று சரவணபவன் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்க, எதிர்க்கட்சி தலைவரின் பாதுகாப்புக்கு உரிய வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்

எனினும் அது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளமையால் உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.