த.தே.கூட்டமைப்பிற்கும் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு

தென்ஆபிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ரொபினா மார்க்ஸ் (Robina Marks) மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு பாராளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பற்றி இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

சுமார் ஒருமணி நேரம் இந்த சந்திப்புக்கள் நீடித்துள்ளது.

குறித்த சந்திப்பில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரனும் கலந்துகொண்டுள்ளார்.

sam1 sam2