பா.உறுப்பினர் சி.சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஊடாக உதவிகள் வழங்கி வைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் இன்று(29) காலை 10.00 மணிக்கு கரைச்சிப் பிரதேசசெயலக பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் பல உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

சிவஞானம் சிறீதரனின் 2016ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் குறித்த பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 21 இலட்சம் ரூபா நிதியில் இருந்து முதற்கட்டமாக கரைச்சி பிரதேச செயலக ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உதவிகள் செய்யப்பட்டன.

கரைச்சி பிரதேச செயலாளர் கே. நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விளையாட்டுக் கழகங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் ஆலயங்கள் என்பனவற்றுக்கு விளையாட்டு உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் தகரப் பந்தல் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் அமல்ராஜ், கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் வேளமாலிதன், கரைச்சிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சுரேன், கரைச்சி பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர் .

sri_tharan002

sri_tharan003

sri_tharan004

sri_tharan005

sri_tharan006

sri_tharan007

sri_tharan008

sri_tharan009

sri_tharan010

sri_tharan011

sri_tharan012

sri_tharan013

sri_tharan014

sri_tharan015

sri_tharan016