கிராமிய வீதி அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் – ஈ.சரவணபவன்

வடக்கில் கிராமிய அபிவிருத்தி குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் மேம்படுத்துவதாக இந்த வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் நீண்ட காலத் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாகவே தென்படுகின்றது. கிராமிய வீதி அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானதாகும்.

மேலும் கல்விக்காக வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். நாட்டின் அபிவிருத்தியில் மக்களை பங்கெடுக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.