சர்வதேச மனித உரிமைகள் நாள் நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது

கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று(12) காலை 10.00 மணிக்கு கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் பிரஜைகள் குழுவின் தலைவர் சி.சின்னராசா தலைமையில் சர்வதேச மனிதஉரிமைகள் தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

முதலாவதாக பொதுச்சுடரினை யாழ்ப்பாண, கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஏற்றி வைத்துள்ளார்.

அடுத்து மனித உரிமை செயற்பாட்டாளர்களான மறைந்த வண.பிதா கிளி. பாதார் மற்றும் மறைந்த ஆசிரியர் ஆனந்தராசா ஆகியோருடைய திருவுருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டுள்ளது.

அடுத்து மறைந்த மனித உரிமை செயற்பாட்டாளரான ஆசிரியர் ஆனந்தராசா ஞானபகார்த்த நினைவுப்பேருரையை கமநல சேவை உத்தியோகஸ்தர் நடராசா சுந்தரமூர்த்தி நிகழ்த்தியுள்ளார்.

இந்த நிகழ்வின் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட நீதி சமாதான ஆணைக் குழு தலைவரரும் யாழ் கத்தோலிக்க மறை மாவட்டம் வண. பிதா எஸ்.வி.மங்களராஜா நல்லிணக்கத்திற்கான ‘சவால்களும் தடைகளும்’என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அருட்தந்தைகளான ஜெயபரட்டணம், நிக்சன் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. kilinochchi_human_rights_day001__15_ kilinochchi_human_rights_day001__14_ kilinochchi_human_rights_day001__12_ kilinochchi_human_rights_day001__11_ kilinochchi_human_rights_day001__9_ kilinochchi_human_rights_day001__8_ kilinochchi_human_rights_day001__6_ kilinochchi_human_rights_day001__5_ kilinochchi_human_rights_day001__4_ kilinochchi_human_rights_day001__3_ kilinochchi_human_rights_day001__1_ kilinochchi_human_rights_day001