அம்பாந்தோட்டை தாக்குதலுக்கு சம்பந்தன் கண்டனம்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் அதனை வன்மையாக கண்டிக்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“இந்தப் போராட்டத்தை மையமாகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி அம்பாந்தோட்டை அல்லது வேறெங்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றாலும் அதனைப் பார்த்து நான் மௌனம் காக்கப் போவதில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.