யுத்தத்தால் அங்கவீனமான இராணுவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் வடக்கில் இல்லை – சாந்தி சிறிஸ்கந்தராசா

யுத்தத்தால் அங்கவீனமான இராணுவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் வடக்கில் இல்லை பாராளுமன்ற உறுப்பினா் சாந்தி சிறிஸ்கந்தராசா

யுத்தத்தால் அங்கவீனமான இராணுவத்திற்கு அரசு விசேட நிதி ஒதுக்கீடுகளை விசேட சலுகைகள் திட்டங்களை மேற்கொளவது போன்று வடக்கில் யுத்தம் காரணமாக அங்கவீனமானவா்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கபடவில்லை என பாராளுமன்ற உறுப்பினா் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளாா்

இன்று 15-12-2016 கிளிநொச்சியில் கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோா் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாற்றுவலுள்ளோா் கௌரவிப்பு நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

அங்கு அவா் மேலும் குறிப்பிடுகையில்

2017 வரவு செலவுத்திட்டத்தில் யுத்தத்தில் அங்கவீனமான இராணுவத்திற்கு விசேட நிதி ஒதுக்கீடுகளும் விசேட சலுகைகளும் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால் வடக்கில் யுத்தத்தால் அங்கவீனமானவா்களுக்கு அவ்வாறு எந்த விசேட திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. எம்மை இன்று வேறுபாட்டுடன்தான் பார்க்கின்றார்கள். இது தொடா்பில் பாராளுமன்றத்தில் நான் பல தடவைகள் பேசியிருக்கின்றேன்.

எங்கள் மாற்று வலுவுள்ள பிள்ளைகளை புலிகளாக தொடா்ந்தும் பார்க்க வேண்டாம் அவா்கள் புனா்வாழ்வுபெற்று இந்த சமூகத்தில் இணைந்து வாழ்கின்றவா்கள் எனவே நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த அரசு தெற்கில் உள்ளவா்களுக்கு வழங்கின்ற விசேட சலுகைள் போன்று எமது பிள்ளைகள் விடயத்திலும் விசேட சலுகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை நான் தொடா்ந்து வலியுறுத்துகிறேன்

மேலும் மாற்றுத்திறனாளிகள் பற்றி அவா்களின் உரிமைகள் நலன்கள் பற்றி கதைப்பவா்களாக மட்டும் நாம் இருந்து விடாது எங்கள் அடி மனங்களில் மாற்றம் ஏற்படுகின்றவா்களாக நாம் மாறவேண்டும். மாற்றுத்திறனாளிகள் தொடா்பில் விழிப்புணா்வு யாருக்கு தேவை? என்பது தொடா்பில் நான் ஒரு மாற்றுத்திறனாளி என்ற வகையில் எனது அனுபவத்தின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளான எமக்கு வழிப்புணா்வு தேவையில்லை நாம் வழிப்பாகதான் இருக்கின்றோம். எங்களோடு கூட இருக்கின்ற சமூகத்திற்கே தேவை எனக் குறிப்பிட்ட அவா்

நாம் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகளை எவரிடமும் இரந்து கேட்கவில்லை எங்களுக்குரிய உரிமைகளை எமக்கு தாருங்கள் என்றுதான் கேட்கின்றோம்.எங்கள் சமூகத்தின் மனங்கள் மாறவேண்டும். மாற்றுத்திறனாளிகள் போக்குவரத்து செய்கின்றபோது குறிப்பாக பேரூந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று இருக்கைகள் ஒதுக்கி வைத்திருக்கின்றபோதும் சில சமயங்களில் ஒற்றை காலுடன் ஒருவா் நின்று வருகின்ற போது இருக்கைகளில் இருப்பவா்கள் எழுந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இடம்கொடுக்காமை இன்றும் நடக்கிறது. எனவே இவா்களின் மனங்களில் மாற்றம் வரவேண்டும். அவ்வாறானவா்களுக்குதான் விழிப்புணா்வு தேவை.

இந்த மண்ணின் விடிவுக்காக தமிழ் இனத்தின் விடுதலைக்காக தம்மை அா்ப்பணித்த பலா் இன்று கையை இழந்து காலை இழந்து இடுப்பை இழந்து பல்வேறு பட்டப் பெயா்களுடன் கூனிக்குறுகி போய் வாழ்கின்றாா்கள். இவா்கள் தொடா்பான சமூகத்தின் மனநிலை மாறவேண்டும். அன்று அவா்களுக்கு எப்படி மதிப்பு கொடுத்தோமோ அதனைவிட மேலானமதிப்பு கொடுக்க வேண்டும். எனக்கேட்டுக்கொண்ட அவா்.

மேலும் மாற்று வலுவுள்ளோருக்கு ஏற்ற வகையில் திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும், குறிப்பாக இந்த பிரதேசத்தில் ஒரு தொழிப்பேட்டை ஆரம்பிக்க வேண்டும் அதில் மாற்று வலுவுள்ளோர்கள் தங்கள் இயலுமைக்கு அமைவாக தொழில் மேற்கொள்ளகூடிய வசதிகளை ஏற்படுத்தவேண்டும் அதன் மூலம் அவா்கள் தாங்களாக சுயமாக உழைத்து தங்கள் வாழ்வாதாரத்தை கொண்டுசெல்ல வேண்டும். எனவும் தெரிவித்த அவா்

. இதனை தவிர எமது பிள்ளைகளுக்கு வழங்கப்படுகின்ற சாரதி அனுமதி பத்தி்ரம் வழங்கும் விடயத்திலும் தொடா்ந்தும் முறைகேடுகள் இடம்பெற்று வருகிறது அந்த விடயத்திலும் நான் அக்கறை எடுப்பேன் எனவும் தொிவித்தாா்.

மாற்று வலுவுள்ளோா் சங்கத்தின் தலைவா் ஆ.நேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் வி. தபேந்திரன், பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்கள் மாற்று வலுவுள்ளோா் சங்கத்தின் அங்கத்தவா்கள் என பலா் கலந்துகொண்டனா்.