மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மக்கள் சார்பாக நாம் முன்வைத்த கோரிக்கைகள். – ஜெ ஜெனார்த்தனன்

கன்னியா வெந்நீரூற்று பகுதி எதிர்வரும் 2017 ஐனவரி முதல் உப்புவெளி பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும் என இவ்வருடம் பெப்ரவரி இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.அந்த விடயம் சம்மந்தமாக இது வரை மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக தெரியப்படுத்தவும்.

குச்சவெளியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செம்பிமலை செம்பீஸ்வரர் ஆலயத்தின் புனருத்தாபனப் பணியை மேற்கொள்ள மாவட்ட அபிவிருத்திக்குழு மூலமான அனுமதியை வழங்குமாறு கோருகின்றோம்.

நிலாவெளி புறாமலை சுற்றுலா பகுதியின் நிர்வாக மற்றும் நிதி ரீதியான ஆளுகையினை குச்சவெளி பிரதேச சபைக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும்.

பட்டிணமும் சூழலும் பிரதேச செயலக எல்லைக்குள் உள்ள செல்லநாயகபுரம் வைத்தியசாலைக்கு அருகில் யுத்த காலத்தில் திடீரென உருவாக்கி இன்று வரை அகற்றப்படாதுள்ள இராணுவ முகாமை உடனடியாக அகற்றுமாறு கோருகின்றோம்.

திருகோணமலை மாவட்டத்தில் கட்டிட நிர்மானப்பணிகளுக்காக வழங்கப்படுகின்ற மணல் அகழ்வதற்கான அனுமதி மற்றும் கருங்கல் உடைப்பதற்கான அனுமதிப் பத்திரங்கள் யார் யாருக்க வழங்கப்பட்டுள்ளன.என்ற விபரத்தை சபையில் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.

விளாங்குளம் கிராமத்திற்கான பிரதான குடிநீர் திட்டம் இல்லாததால் அதற்கான குடிநீர் திட்டத்திற்கான பிரதான குழாய் பதிக்கும் நடவடிக்கையை மேற் கொண்டு இக்கிராம மக்களுக்கு குடிநீர் திட்டததை வழங்கவும் 1964ம் ஆண்டு குடியேற்றப்பட்டும் இன்னும் வழங்கப்படாமல் இருக்கும் காணி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியோக வகுப்பக்கள் அதிகமாக இடம் பெற்று வருகிறது. எனவே அவர்களுடைய மதத்தின் அறவழிகளைப் போதிக்கும் அறநெறி பாடசாலைகளுக்கு இம் மாணவர்களால் செல்ல முடியாதுள்ளது.எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களில் நடாத்தும் பிரத்தியோக வகுப்புக்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம்.