suman

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் எவ்வித விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை!!

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் எவ்வித விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அனுசரணையில் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற ‘தமிழருவி – 2016′ எனும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்களின் ஆணையிலே என்னென்ன விடயங்கள் இருக்கின்றனவோ அத்தனை விடயங்களும் அரசியல் யாப்பில் இருந்தால் மாத்திரமே அதனை ஏற்போம் என குறிப்பிட்ட சுமந்திரன், தனி நாடு கோரிக்கையை தவிர வேறெந்த விட்டுக்கொடுப்பிற்கும் இணங்கவில்லையென இதன்போது சுட்டிக்காட்டினார்.