நிதி ஒதுக்கீடு மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு. அதை நடைமுறைப்படுத்துவது உரிய பிரதேச செயலாளர்களின் கடமை.

பிரதேச சபையின் அனுமதி பெறாது நினைவு கலாச்சார சின்னங்களை வைத்ததாக ஊடகங்களில் வந்ததை பார்த்தேன்.

எனது பாராளுமன்ற நிதி ஒதுக்கீட்டின் கீழ் கலாச்சார அமைச்சின் அனுமதியுடன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதியுடன் மேற்படி நினைவு சின்னங்களை நிறுவும் வேலைகள் இடம் பெற்று வந்தன.

நிதி ஒதுக்கீடு மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு. அதை நடைமுறைப்படுத்துவது உரிய பிரதேச செயலாளர்களின் கடமை.

மாவட்ட இணைப்பு குழுவில் முதலமைச்சர் (உள்ளூராட்சி அமைச்சர்) அவர்களும் ஒரு கூட்டு பங்குதாரர். எனவே அவர் முன்னிலையில் அனுமதிக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு சகல திணைக்களங்களும் கட்டுப்பட்டு ஆக வேண்டும்.

மற்றப்படி மாவட்ட இணைப்புக்குழுவின் அனுமதி பெறாத புத்தர் சிலைகள், இராணுவத்தின் பெயர் சூட்டும் வீதிகள் என எதுவும் அனுமதி அற்று நடக்கும் போது, உரிய முறைப்படி அனுமதிக்கப்பட்ட போது மௌனமாக மாவட்ட இணைப்புக்குழுவில் இருந்தவர்களின் கூச்சல் எதற்கு என்பதே கேள்வி. அவர்களுக்கு நிர்வாக அறிவு அற்றமையே இப்படியான பிரச்சினைகளுக்கு காரணமாகும்.

தமிழர் கலாச்சார மேம்பாட்டு முயற்சிகளை நாம் முன்னெடுக்கும் போது அதை தடுக்கிறார்கள் என்பதற்காக எமது பாதையை நாம் மாற்றப் போவதில்லை. மேலும் உரம் பெற்று முன்னேறுவோம் – வன்னி எம்.பி.சி.சிவமோகன்.