16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி கொழும்பில் இருக்க வேண்டும் – இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி கொழும்பில் இருக்க வேண்டும் என இரா.சம்பந்தன் அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளமையினாலேயே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறும்.