“அபிவிருத்திச் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறிக்கும் – குறைக்கும் நடவடிக்கைகளை ஒருபோதும் ஆதரிக்க முடியாது.”

“அபிவிருத்திச் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறிக்கும் – குறைக்கும் நடவடிக்கைகளை ஒருபோதும் ஆதரிக்க முடியாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.அபிவிருத்திச் சிறப்பு ஏற்பாடுகள் சட்ட வரைவு, மாகாண சபைகளின் ஒப்புதலைப் பெற்றுக்கொள்வதற்காக மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்ட வரைவு, புதிய அரசமைப்பின் ஊடாக மாகாண சபைகளுக்குக் கொடுக்கப்படும் அபிவிருத்தி அதிகாரங்களை மீளப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

இந்தச் சட்டத்தை வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தமிழ் சிவில் சமூகத்தினர் எச்சரித்திருந்தனர்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்,“இந்தச் சட்ட வரைவின் ஊடாக மாகாண சபையின் அதிகாரங்களுக்குப் பாதிப்பு ஏற்படும்.

மாகாண சபைகளின் அதிகாரங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன. அதனை மேலும் வலுவிழக்கச் செய்யக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்தியை எதிர்க்கவில்லை.

ஆனால், மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதை உருவப்படுவதை எதிர்க்கின்றது” – என்றார்.