ஒற்றையாட்சிக்குள் தீர்வை ஏற்படுத்த முடியாது .

ஒற்றையாட்சிக்குள் தீர்வை ஏற்படுத்த முடியாதென தென்னிலங்கை தலைவர்களுடனான சகல சந்திப்புகளின்போதும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தர முடியாதென குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எவ்வித விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமஷ்டிக்கு இடமில்லையென்றும் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு வழங்கப்படும் என்றும் அரசாங்க தரப்பு தொடர்ச்சியாக குறிப்பிட்டு வரும் நிலையில், அது குறித்து கருத்துத் தெரிவித்த சம்பந்தன்,

ஒற்றையாட்சிக்குள் தீர்வை ஏற்படுத்த முடியாதென தென்னிலங்கை தலைவர்களுடனான சகல சந்திப்புகளின்போதும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறான ஒரு அரசியல் தீர்வே நிரந்தரமானதாக இருக்குமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.