அமெரிக்கன் மிசன் பாடசாலை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு மீண்டும் கொண்டுசெல்லப்படும்.

பலாலி வடக்கில் உள்ள அமெரிக்கன் மிசன் பாடசாலை தொடர்பினில் நாம் ஏற்கனவேயாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மற்றும் ஜனாதிபதியுடன் உரையாடியுள்ளோம்.

அதேபோன்று 4ஆம் திகது யாழிற்கு வரும் ஜனாதிபதியின் கவனத்திற்கு மீண்டும் கொண்டுசெல்லப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பினில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,

பலாலி வடக்கினில் மீள்குடியேறும் மாணவர்களின் நன்மை கருதி அதன் அருகில்இராணுவத்தினரின் பிடியில் உள்ள பலாலி வடக்கு அமெரிக்கன் மிசன் பாடசாலையைவிடுவித்து மாணவர்களின் கற்றலுக்கு உதவ முன்வர வேண்டும் என அப் பகுதி மக்கள்கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அவ்வாறு விடுவிக்கப்பட்ட கோரிக்கை தொடர்பினில் நாம் ஏற்கனவே எமது கரிசனையைகொண்டுள்ளோம். இதற்காக அண்மையில் ஜனாதிபதி மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி ஆகியோரையும் சந்தித்து நேரில் கலந்துரையாடினோம்.

இருப்பினும் விரைவில்யாழிற்கு வரும் ஜனாதிபதியிடம் இருந்து இது தொடர்பில் ஓர் உறுதியானநிலைப்பாட்டினையும் பெறுவதற்கு முயற்சிப்போம்.

தற்போதைய சூழலில் அங்குள்ள எமது மாணவர்கள் கல்விக்காக 10 கிலோ மீற்றர் தூரம்பயணிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

இருப்பினும் அவர்களின் வாழ்விடப்பகுதியில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் பலாலி அமெரிக்கன் மிசன்பாடசாலை உள்ளது.

இதனை விடுவிக்க படையினர் முன்வருவார்களானால் அங்குள்ள 150மாணவர்களின் எதிர் காலம் சிறப்படையும்.

இல்லையேல் குறித்த 150 மாணவர்களும்தினமும் கல்விக்காக 20 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்யும் உடல் , உளச்சோர்வுடனேயே கல்வி கற்க வேண்டும்.

இவ்வாறு சிறுவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதோடு அச் சிறுவர்கறிற்காக பெற்றோரிம்அலையும் நிலமையே ஏற்பட்டுள்ளது.

எனவே இவற்றினைக் கருத்தில் கொண்டு அம்மக்களின்இயல்பு வாழ்க்கைக்காக நாம் தொடர்ந்தும் முயற்சிப்போம்.

இதற்காக எதிர்வரும்4ம் திகதி யாழ். குடாநாட்டிற்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படும்ஜனாதிபதியின் கவனத்திற்கு எமது சார்பினில் குறித்த விடயத்தினைக் கொண்டு சென்றுஎமது மாணவர்களின் பாடசாலையினைப் பெற்று அவர்களின் இயல்பான கல்விக்காகமுயற்சிக்கப்படும். என்றார்.