புதுவருடத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று விசேட நிகழ்வுகள்

பிறந்துள்ள புதுவருடத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று (2017.01.02) விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இலங்கையின் தேசியக் கொடியை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஏற்றி வைத்தார்.

பின்னர் புதுவருடத்தை வரவேற்கும் முகமாக கட்சி அலுவலகத்தில் விளக்கேற்றியதுடன், பாரம்பரிய உணவு வகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் விசேட கூட்டம் நடைபெற்றது.