முன்னாள் போராளிகளின் இன்றைய நிலையில் உடனடி மாற்றம் வேண்டும் – மாவை சேனாதிராஜா.

முன்னாள் போராளி இனியவனின் இறுதி அஞ்சலி நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும், பாராளமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா முன்னாள் போராளிகள், மக்களுடன் கலந்துரையாடினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய கால கட்டத்தில் முன்னாள் போராளிகள் பலர் அடிப்படை வசதிகள் கூட இல்லால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எமது நாட்டுக்கு செய்த தியாகத்தை நாம் எவரும் மறந்து விட முடியாது. இந்நிலையில் இருந்து அவர்களுக்கு உடனடி மாற்றம் வேண்டும்.

இந்த அரசாங்கம் அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை தமது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பொழுது கொடுத்த வாக்குறுதிகளான பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு புனர்வாழ்வு திட்டம், அடிப்படை வசதிகள் அவர்களுக்கான வீடு, கல்வி மற்றும் சுகாதார வசதிகள் மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவிகள், தொழில் வாய்ப்புகளை பெற்று கொடுத்தல் ஆகியவற்றை சரியான முறையில் செய்திருந்தால் இன்று நாம் இவர்களை இழக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்காது.

நாம் பலமுறை இதற்கான விண்ணப்பங்களை எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் தெரிவித்து இருந்தோம்.
ஆனால், இன்றுவரை ஓர் சரியான தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. நாளை ஜனாதிபதியுடன் நான் நேரில் சென்று சந்திப்பை மேற்ற்கொள்ளவுள்ளேன். அப்பொழுது இதற்கான தீர்வை உடனடியாக செய்து தரும்படி அவர்களிடம் எமது கட்சி சார்பாகவும் முன்னாள் போராளிகள் சார்பாகவும் கோரிக்கையை முன் வைப்பேன் என கூறினார்.