தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான குழுக்கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான குழுக்கூட்டம் இன்று நடைப்பெற்றது.

குறித்த குழுக்கூட்டமானது கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில், எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைப்பெற்றது.

இதன்போது, புதிய அரசியலமைப்பு மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.