மாவை சேனாதிராஜா திடீரென்று மயக்கமடைந்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா மயங்கி விழுந்துள்ளார் .

குறித்த சம்பவம் பாராளுமன்றில் இன்று இடம்பெற்றது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் கனேடிய தமிழர்கள் மூவருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தபோதே மாவை சேனாதிராஜா திடீரென்று மயக்கமடைந்துள்ளார் .

இதனையடுத்து உடனடியாக அவர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு ஆபத்தான நிலைமைகள் எதுவும் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.