கனடாவில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் பொதுக்கூட்டத்தில் விக்னேஸ்வரன் உரையாற்றுகிறார்

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கனடாவில் எதிர்வரும் 15 ஆம் திகதி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கிறார்.

இந்த கூட்டம் ஜனவரி 15ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு 875 Morningside Ave Scarborough வில் அமைந்திருக்கும்
PAN AM CENTRE – Scarborough எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

தாயக மக்களின் சமகால நிலை குறித்து விரிவான உரையை வழங்கவிருக்கும் முதலமைச்சர் பொதுமக்களின் வினாக்களுக்கும் அங்கு பதில் கூறவுள்ளார்.

இந்த கூட்டத்தில் கனடா வாழ் பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.