சமஷ்டியும் இல்லை – ஒற்றையாட்சியும் இல்லை! சுமந்திரன்.

உத்தேச அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு அதிகாரங்கள் பகிரப்படுகின்ற அதேவேளை, அதில் காணப்படுகின்ற பொதுப்பட்டியல் நீக்கப்படுவதுடன் வடக்கு – கிழக்கு இணைப்பும், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை பெறும்வரை சாத்தியமாகாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உத்தேச அரசியல் யாப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சமஷ்டியா ஒற்றையாட்சியா என்பது நாடளாவிய ரீதியில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பானது குறித்த வார்த்தைப் பிரயோகங்களை நீக்கிவிட்டு, பகிரப்படுகின்ற அதிகாரங்களை மீளப் பறித்தெடுக்கமுடியாத வகையிலான சட்ட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டு, எந்தவொரு சமூகத்தையும் பாதிக்காத முழுமையான அதிகாரப் பகிர்வாக அமையும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் அது தொடர்பான பல்வேறு முக்கிய தகவல்களை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.