sampanthan

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவுக்கு அரசாங்கம் வழங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்க அரச நிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் தலையீட்டின் அடிப்படையில், அரச நிர்வாக அமைச்சு எதிர்க்கட்சித் தலைவருக்கு இந்த இல்லத்தை வழங்கியுள்ளது.

சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் இந்த உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது.