கனடாவில் இடம்பெற்ற முதலமைச்சரின் ஊடகவியலாளர் சந்திப்பு.

உத்தியோகபூர்வ விஜயமாக கனடா சென்றுள்ள வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது நடைமுறை அரசியல் சார்ந்த கேள்விகள் தொடுக்கப்பட்டன.

குறிப்பாக, தற்போதைய அரசு தமிழருக்கான தீர்வை தரும் என நம்புகின்றீர்களா..?, அடுத்த தேர்தலில் போட்டியிடுவீர்களா..?, வடமாகாணசபை சிறப்புடன் செயலாற்றி வருகிறது எனக் கருதுகின்றீர்களா..? உள்ளிட்ட காரசாரமான கேள்விகள் தொடுக்கப்பட்டன.

இதற்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் காத்திரமான பதில்களை வழங்கியிருந்தார். அந்த ஊடகவியலாளர் சந்திப்பு குறித்த முழுமையான விடயங்களை காணொளியில் பார்க்கலாம்.