தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை ஹோமகமவுக்கு மாற்றுவதை தடுக்க முயற்சி!

தமிழ் அரசியல் கைதிகள் 38 பேரின் வழக்கு விசாரணைகள் ஹோமகமைக்கு மாற்றப்படுவதை தடுக்கும் நோக்கில் நீதி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பிலான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் வழக்குகள் கொழும்புக்கு வெளியில் கொண்டு செல்லப்படுகின்றன. இது அவர்களில் விடுதலையை இழுத்தடிக்கும் செயற்பாடு என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்நிலையிலேயே, குறித்த விடயம் தொடர்பில் நீதி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த 38 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் கொழும்பு விஷேட நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்றமை கவனிக்கத்தக்கது.