மாவை சேனாதிராஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை

தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தற்பொழுது உடல் நலக்குறைவடைந்துள்ளதாகவும் நோயை கட்டுப்படுத்தும் மருந்து மாத்திரைகள் பாவிப்பதாகவும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள நோயினை முழுதாக குணப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பாராளுமன்ற வளாகத்தில் மயக்கமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த நிலையிலேயே கட்சி ஆதரவாளர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.