ஒட்டுசுட்டானில் புனரமைக்கப்பட்ட இரண்டு குளங்கள் விவசாயிகளிடம் கையளிப்பு

ஒட்டுசுட்டானில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால் புனரமைக்கப்பட்ட இரண்டு நீர்ப்பாசனக் குளங்கள் விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வெளிவயல் குளம் மற்றும் துவரமோட்டைக் குளம் ஆகிய இரண்டு குளங்களின் கையளிப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு விவசாய அமைப்புகளின் தலைவர்களிடம் துருசுக் கதவுகளின் சாவிகளைச் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைத்துள்ளார்.

குறித்த புனரமைப்பிற்கான நிதி மத்திய விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் முல்லை மாவட்ட உதவி ஆணையாளர் செ.புனிதகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர்கள் க.சிவநேசன், ஆ.புவனேஸ்வரன், சு.பசுபதிப்பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.