த.தே.கூட்டமைப்பின் சிறந்தவர்களில் சுமந்திரனும், சம்பந்தனும் தெரிவு!

சிறந்த கட்சி உறுப்பினர்கள் பட்டியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளில் திறமையாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீநேசன், இரா.சம்பந்தன், சிறீதரன் மற்றும் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மதிப்பீடு கடந்த வருடம் 2015 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மதிப்பிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.