அரசாங்கம் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாட்டினால் பொதுமக்கள் அதிருப்தி – சம்பந்தன்

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலும், நாளாந்தம் ஊழல் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை தொடர்பிலான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊழலை ஒழிக்கத் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தில் உள்ள சில உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.

அரசாங்கம் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாட்டினால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.