பிணை முறி மோசடி! குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்- சம்பந்தன்

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணைஆணைக்குழுவொன்றினூடாக விசாரணை செய்து உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும்வலியுறுத்தியுள்ளார்.

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில்இன்று நடைபெற்ற கோப் குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பான விவாதத்தில்உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவற்றை வலியுறுத்தியுள்ளார்.

ஊழல் மோசடிகள் தற்போதும் தொடர்வதால் நாடும் பாதிக்கப்படுகிறது. இந்த மோசடிகள்நிறுத்தப்படவில்லை என்றால் அது ஜனநாயகத்துக்கே பாதிப்பாக அமையும்.

இலங்கை மத்தியவங்கி இன்று அதற்குரிய மதிப்பை இழந்துள்ளதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.