மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஊழல்வாதிகள் அல்ல!

ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் ஒருவரையொருவர் ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர். எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஊழல்வாதிகள் அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.