ரவிராஜ் கொலை வழக்கு மனுவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கினை தள்ளுபடி செய்த முறமை தவறு என தாக்கல் செய்யப்பட்ட மனுவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் கொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் யூலியஸ் சபையின் முன்பாக இடம்பெற்றவேளையில் சந்தேக நபர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழுக்கும் தவனையின்போது சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை என்ற காரணத்திற்காக தள்ளுபடி செய்யப்பட்டது.

இவ்வாறு தள்ளுபடி செயப்பட்ட முறமையில் உரிய நடமுறை பின்பற்றப்படவில்லை என்பதனால் குறித்த வழக்கினை விசாரணைக்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்க வேண்டும் என சட்டத்தரணி சுமந்திரன் உடனடியாகவே ஓர் நகர்த்தல் பத்திரம் மூலம் மற்றுமோர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவினை நேற்றைய தினம் ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்கினை தள்ளுபடி செய்தவேளையில் நீதிமன்றம் சட்டத்தரணிகளிற்கு அறிவிக்காத்தோடு வழமையாக பின்பற்றப்படும் நடவடிக்கைகளும் பின்பற்றப்படவில்லை எனக் குறிப்பிட்டமை தொடர்பில் ஆராய்ந்து சட்டத்தரணியின் கூற்று உண்மையெனக் கண்டறிந்த்து.

இதன் காரணத்தினால் அவ்வழக்கினை விசாரணைக்கு ஏற்பதாக இன்று ( நேற்று) அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் குறித்த வழக்குத் தொடர்பான முதல் ஆய்வு எதிர் வரும் மார்ச் மாதம் 3ம் திகதி இடம்பெறும் எனத் திகதியிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்தார்.