யுத்தம் முடிந்தபின்னர் தொழில்துறையிலான அபிவிருத்தி ஏற்படுத்தப்படாமையினால் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பில்லாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் – சிறிதரன்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தம் முடிந்தபின்னர் தொழில்துறையிலான அபிவிருத்தி ஏற்படுத்தப்படாமையினால் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பில்லாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் வடக்குமாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் 18 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட புதிய கட்டடத்திறப்புவிழாவில் நேற்று (02-02-2017) கலந்து கொண்டு உரையாற்றுகையில் விவசாய விளைபொருட்கள் விற்பனை மையமாக இருந்த இக்காணி மறைந்த கல்வி மான் பொன் சபாபதி அவர்களின் நல்லெண்ணமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரி அவர்களினது முயற்சிகளினாலும் இந்தக்காணி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டகாணியின் செயற்பாடு இவ்வாறு முன்மாதிரியாக வளர்ந்து பாடசாலையாக மாற்றம் பெற்றுள்ளது.

வட்டக்கச்சி மகாவித்தியாலயம் அதன் வரலாற்றில் கல்வித்துறையிலே பல பயிற்சியாளர்களை உருவாக்கியுள்ளது.

இடப்பெயர்வகள் மீள்குடியேற்;றம் பாடசாலைகளின் தரம் உயர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஆரம்பத்தில் கிடைத்த வளங்கள் பெரிய மாற்றங்களைக்கொண்டு வரப்பட்டன. இவ்வாறு பாடசாலையின் பல்வேறுபட்ட பரிநாமங்களல் வடக்குமாகாண கல்வி அமைச்சின் ஊடாக இந்த இருமாடிக்கட்டடம் வழங்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மிகமிக முக்கியமாக இன்று கல்வியினுடைய செயற்பாடுகள் கல்வியினுடைய துறைகள் வடக்கிலும் கிழக்கிலும் வீழ்ந்து செல்கின்றது. கல்வியில் எவ்வளவு முன்னேற்றம் கண்டாலும் அதற்கான காரணங்கள் என்ன என்று ஆராயப்படாமல் கல்வியே பின் நோக்கி செல்கின்ற செயற்பாடுகளை நாங்கள் பார்க்;கின்றோம்.

ஆனாலும் கல்வித்துறையில் ஒரு சராசரியான மாணவர்கள் முன்னேங்களைக்;கண்டாலும் ஒரு தொகுதி மாணவர்கள் வெளியிலே செல்லுகின்ற சூழல் தான் காணப்படுகின்றது.

இதற்கு பல்வேறுபட்ட காரணங்கள் காணப்படுகின்றன. முழுமையான யுத்தத்தை எதிர்கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் யுத்;தம் முடிந்;த பின்னர் தொழில் துறையிலான அபிவிருத்திகளில் தொழிற்சாலை மயப்படுத்தப்பட்ட ஒரு சூழலுக்குள் கொண்டு வரப்;படவில்லை.

இதனால் பல்வேறுபட்ட இளைஞர்கள் யுவதிகள் வேலைவாய்ப்பில்லாத ஒரு நிலைக்குள் தள்;ளப்;பட்டனர். நவீன தொழில்நுட்பங்கள் முக நூல்கள் இணையத்தளங்கள் செய்தி ஊடகங்கள் தமிழர்களினுடைய அளவைவிட மிக கூடுதலாக உள்ளன.

அவை கூட சின்னசின்ன விடயங்களையும் ஏதோ ஒரு வகையில் அவர்களை வேறு திசைகளுக்கு கொண்டு செல்லுகின்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

ஆகவே கல்வித்துறை வீழ்ச்சிக்கு காரணங்கள் உள்ளன. நவீன தொழில்நுட்பம் கல்வியை எவ்வாறு வளர்த்;துச்செல்கின்றது என்று எதிர்பார்க்கின்றோமோ அந்த நவீன தொழில்நுட்பம் கல்வியிலே பல்வேறுபட்ட பின்னடைவுகளையும்கொண்டு வருகின்றன.

ஆனால் இவ்வாறான சூழலுக்குள்ளால் கற்கின்ற பிள்ளைகள் முன்னேற வேண்டும்;.
இந்தப்பாடசாலையில் கல்வி கற்று கடந்த ஆண்டில் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பிரிசில் பரிட்சையில் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார்.

மாயவனூர் என்ற குக்கிராமத்தில் இருந்து வந்து இங்கு படித்த இந்த மாணவன் அவ்வளவு தூரம் ஆற்றல் உள்ள மாணவனை காண முடிகின்றது. அவரை வளர்த்த ஒவ்வொருவரினதும் பங்கும் மகத்தானது.

பிள்ளைகளினுடைய வழிகாட்டிகளாக இருக்கின்ற ஆசிரியர்களின் பங்கும் எவ்வளவு இடர்கள் வந்தாலும் அவற்றுக்குள்ளால் கற்றுக்கொண்டு செல்கின்ற திறமையும் அந்த பிள்ளகைளின் ஆற்றலோடு சேர்ந்து நிற்கின்றது.

வட்டக்கச்சி என்பது கல்விக்கான அடையாளமாக வரலாற்றின் எண்ணங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது என அ வர் மேலும் தெரிவித்துள்;ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள்

வடக்குமாகாண சபை என்ன செய்கின்றது என முகநூல்களில் கணிணிகளில் முகங்களை புதைத்துவிட்டு பொய்களை எழுதுகின்றவர்களுக்கு ஊடக விபச்சாரங்களை நடத்துபவர்களுக்கு எல்லலாம் வடக்கு மாகாணசபை இவ்வளவு பெரிய கட்டடங்களை எல்லாம் கட்டியிருக்கின்றது கல்வியை வளர்த்துச்செல்கின்றது என்ற பாடங்களை இந்த இடத்திலே பதிவு செய்கன்றேன் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.