45

வவுனியா நகரசபையின் இரு சிறுவர் பூங்காக்களை திறந்து வைத்துள்ளார் சீ.வி.விக்கினேஸ்வரன்.

வவுனியா நகரசபையின் இரு சிறுவர் பூங்காக்களை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இன்று திறந்து வைத்துள்ளார்.

உலக வங்கியின் நிதி உதவியுடனும், வவுனியா நகரசபையின் நிதிப் பங்களிப்புடனும் 9 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா பொதுப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வவுனியா நகரசபையின் வருடாந்த நிதி பாதீட்டுத் திட்டத்தின் கீழ் குருமன்காடு பகுதியில் 3 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவினையும் முதலைமைச்சர் திறந்து வைத்தார்.

வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மேலும், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராஜா, ம.தியாகராசா, செ.மயூரன், ம.ஜெயதிலக்க, முதலமைச்சரின் செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளார், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினர், நகரசபை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.