தமிழ்மக்களிடம் பறிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. அழிக்கப்பட்டவைகளுக்கும் தீர்வில்லை – து.ரவிகரன்

தமிழ்மக்களிடம் பறிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. அழிக்கப்பட்டவைகளுக்கும் தீர்வில்லை. முத்திரை பதித்த ஆவணங்களுடன் மக்கள் வீதியோரத்தில் காத்துக்கிடக்கின்றனர்.

எங்கள் மக்களுக்கு விடிவும் நிம்மதியான வாழ்வும் இன்னும் கிடைக்கவில்லை. இன்றுவரை அடக்குமுறைக்குள் வாழும் எமது மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று வடக்கு மாகண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் பொதுமக்கள் காணிகளை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் அவர் கருத்து வெளியிடும் போதே அவர் இவவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரம் என்பது சகலவிதமான அடக்குமுறைகளில் இருந்தும் விடுபட்டு எம்மை நாமே ஆளும்நிலையாகும். ஆனால் தமிழ்மக்களை பொறுத்தவரையில் சுதந்திரம் என்பது ஏட்டுச்சுரக்காய் போலவே இருக்கின்றது.

ஒருநாடு ஒருதேசம்.. ஆனால் தமிழ்மக்கள் நாமும் இலங்கையர்கள். எமக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது என்று இதுவரை உணர்வுரீதியாக அனுபவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்