பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம்! சம்பந்தன் வாழ்த்துச் செய்தி

கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது.

எமது நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தக் கூட்டு முயற்சிக்கு நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

எமது 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை வழங்கக் கிடைத்துள்ளமையையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

மக்கள் ஜனநாயகத்தின் உண்மையான பயனாளிகளாக இருப்பதற்கு உதவும் சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நாட்டின் சகல மக்கள் மத்தியிலும் இந்த ஆண்டு நல்லிணக்கததைக் கொண்டு வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

இது எமது நாட்டில் வாழும் அனைத்து மக்களதும் நன்மைக்கு மிக இன்றியமையாததாகும்.

வன்முறை முரண்பாடு ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாயிலும், அந்த வன்முறைகளுக்கான காரணங்களுக்கு இன்னும் தீர்வு காணப்பட வேண்டியுள்ளது.

அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் ஏற்பட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.