இப்படி ஒரு உறுதியை தான் இதற்கு முன் பார்த்ததில்லை – எம்பி.சி.சிவமோகன் .

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை நகரங்கள் சுதந்திர தினத்தில் முடங்கியது. இராணுவ காணி அபகரிப்பை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது. பூரண கர்த்தாலால் வீதிகள் வெறிச்சோடியது.
தமது வாழ்விடங்களை விடுவிக்கும் வரை தொடர் போராட்டத்தில் குதித்தனர் கேப்பாப்பிலவு புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள். இராணுவம் தமது முகாம்களில் முடங்கியது.

மேலும் போராட்டங்களை வேறு வடிவங்களில் வீரியப்படுத்தப் போவதாக மக்கள் தெரிவித்து வருகிறார்கள். முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர் றிஷட் பதியுதீன், அரச அதிபர் என முல்லைத்தீவு மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதும் இராணுவம் தமது வாழ்வியல் பிரதேச காணிகளை விட்டு வெளியேறும் வரை எவரது வாக்குறுதியையும் நம்ப தயார் இல்லை என்பதை தெளிவாக சொல்லி வைத்தனர். இப்படி ஒரு உறுதியை தான் இதற்கு முன் பார்த்ததில்லை என வன்னி எம்பி.சி.சிவமோகன் தெரிவித்தார்.