கேப்பாப்புலவு மக்களைச் சந்தித்தார் வடக்கு முதலமைச்சர்!

கேப்பாப்புலவில் 5ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிலவுக்குடியிருப்பு மக்களை நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், இம்மக்களை இன்று அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரும் சந்தித்துத்துக் கலந்துரையாடினர். இதன்போது இப்பிரச்சனை தொடர்பாக தான் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசுவதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, கேப்பாபுலவில் விமானப்படையின் பிரதான நுழைவாயிலிருந்து புலவுக்குடியிருப்பு வரை காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களால் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கறுப்புக்கொடிகளை ஏற்திய வண்ணம் பொதுமக்கள் பேரணியாக சென்றனர்.

காலியில் சுதந்திரதினம் வீதியில் நாம், விடுதலை எமக்கு எப்போது?, எமது மண்ணை ஆக்கிரமித்து நம்மை வீதியில் அலையவிட்டு நல்லிணக்கம் பேசுதல் முறையா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

k1

k2

k3

k4

k5