பாராளுமன்றை அதிரவைத்த சிறிதரனின் கேள்விகள் ?

எம் .ஏ சுமந்திரனை யார் கொலை செய்ய முயற்ச்சித்தார்கள்?

சுமந்திரனை கொல்ல எப்படி வந்தது கிளைமோர் ?

யார்அந்த கொலை முயற்ச்சியை மேற்கொள்ள இருந்தார்கள் ?

150000 க்கும் மேற்ப்பட்ட படைகள் வடக்கிலும் கிழக்கிலும் குவிக்கப்பட்ட நிலையில் ஒரு இராணுவ வலைப்பின்னலுக்குள் இந்தநாடு இருக்கிறது,போலீசார் எந்த நேரமும் கண்காணிப்பில் இருக்கிறார்கள்,விமானப்படையினர் கடற்ப்படையினர் கண்காணிப்பில் இருக்கின்றனர் , இராணுவத்தின் துணைப்படையும் கண்காணிப்பில் உள்ளது ,எங்கு நாம் சென்றாலும் யாரை சந்திக்க சென்றாலும் இராணுவ,பொலிஸ் புலனாய்வாளர்கள் பின்தொடர்கின்றனர் இவ்வாறன சூழலில் எவ்வாறு ஒரு கிளைமோர் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது ?

ஏன் சுமந்திரன்மீது அந்த இலக்கு வைக்கப்பட்டது ?

அதற்க்கான காரணம் என்ன ?

ஏன் இந்த அரசாங்கம் அதற்க்கான விளக்கத்தை இன்னும் சொல்லவில்லை ?

ஏன் முன்னாள் போராளிகள்மீது இந்தவிதமான குற்றங்கள் சுமத்தப்படுகிறது ?

இதற்க்கு என்ன காரணம் ?

பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர அரசாங்க்கம் நினைக்கின்றதா?

தமிழ் மக்களை விலங்கிடப்படாத கைதிகளாக வைத்திருப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றதா?

இராணுவத்தை நிலைநிறுத்தி வைத்திருப்பதற்கு இராணுவமும் இராணுவ புலனாய்வும் அரசாங்கமும் ஒரு நாடகத்தை நடத்துகின்றதா?

இதனுடைய உண்மைத்தன்மைகள் என்ன ? இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பல கேள்விகளை எழுப்பினார் .