இலங்கையில் உள்ள எந்த தலைவர்களும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க தயாராக இல்லை – சிவஞானம் சிறிதரன்

இலங்கையில் உள்ள எந்த தலைவர்களும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கோவிந்தக்கடைசந்திப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட இரணைமடு விவசாயிகள் சம்மேளனத்தின் புதிய கட்டடத்திறப்பு விழா நிகழ்வு (09-02-2017) பகல் 11.30 மணிக்கு நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தண்ணீர் என்பது உலகில் முக்கியமான ஒரு பொருளாக அதுவும் இழக்கப்படாத பொருளாக இங்குள்ளது.

வடக்குமாகாண சபையிலும் கூட இரணைமடுக்குளம் தொடர்பான செயற்பாடுகள் தீர்;ந்த பாடாக இல்லை. இன்றோ அல்லது இனிவரும் நாட்களிலோ இரணைமடுவில் இருந்து கட்டாயம் தண்ணீர் தரப்படவேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு வடக்கு மாகாண சபையின் பலர் முனைந்து கொண்டிருக்கின்றனர்.

இன்று அது ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் இன்னும் சில நாட்களில் அதற்கான கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

விவசாயிகள் யாரும் கிளிநொச்சியில் தண்ணீரை குடிப்பதற்கு தரமாட்டோம் என்று சொல்லவில்லை.
ஆனால் இங்குள்ள விவசாயப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அடிப்படையில் பல்வேறுபட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்திருக்கின்றனர்.

அந்த கோரிக்கைகளின் அடிப்படையில் குளத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதைக்கூட இயற்கை வனவளத்திணைக்களம் மற்றும் பல திணைக்களங்களின் தடைகள் காணப்பட்டன.
வரட்சியால் இன்று கிளிநொச்சி மவட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய வயலைக் காப்பாற்ற முடியுமா என எங்கித்தவிர்க்கின்றனர்.

இரணைமடுக்குளம் பற்றிய ஒரிருவரினது செயற்பாடுகள் ஒரு பிரதேச வாத அடிப்படையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி என்ற எதிர் மனப்பாங்கில் அவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டுக்கொண்டிருப்பது இலங்கை அரசை மட்டும் குற்றஞ்சாட்டுவதற்கு அப்பால் எங்களுக்குள் பாரிய விரிசல்களையும் எங்களுக்குள் பாரிய தேக்கங்களையும் உண்டுபண்ணிக் கொண்டிருக்கின்றது.

இது மிக அபாயகரமானது எங்களுக்குள் ஒரு புரிதல் இல்லாமல் இருப்பதும் மக்களின் பிரச்சனைகளை விளங்கிக்கொள்ளாமல் இருப்பதும் ஒரு அபாயகரமானது.

குறிப்பாக இரணைமடுக்குளத்தின் கீழுள்ள அறுபது வீதமான காணிகள் யாழ்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களது அதை அவர்கள் வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ வழங்கியிருக்கின்றார்கள்.

இங்குள்ள ஏழை விவசாயிகளுக்கு நிலம் என்பது மிகமிக குறைவு அதிக நிலங்களைக் கொண்டவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருப்பவர்கள் தான் இந்த நிலையினை உருவாக்குகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒரு சிலருக்கும் இவ்வாறு இங்கு காணிகள் உள்ளன. ஆனால் அவர்கள்தான் தண்ணீரைக்கொண்டு போக வேண்டும் என கூறுகின்றார்கள்.

இரணைமடு விவசாயிகளின் எண்ணங்கள் தேவைகளை மதிக்காமல் இவ்வாறு முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வதை விடுத்து விவசாயிகளுடன் பேசிக்கொள்ளவேண்டும்.

எங்களுடைய இனத்தின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. இது வெளிப்படையாகத் தெரியும் உண்மை. இரணைதீவை விடும்படி பாராளுமன்றத்தில் நான் கேட்டபோது அது பாதுகாப்பு படைக்கு தேவை அதனைத்தர முடியாது என்பது பிரதமரின் பதில் முன்பு விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கடத்தினார்கள் இப்போது போதை வஸ்த்து கடத்துகின்றார்கள் அதனால் அந்த இடம்தேவை என்றார் அதை சிறிது காலத்தில் சுவாமி நாதனிடம் ஒப்படைப்பதாகவும் கூறினார்.

இப்படியே கூட்டம் போடுவதும் கதைப்பதும் ஒரு நாகரீகமாக இலங்கையில் இருந்து வருகின்;றது.
இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களை கொல்லதிட்டமிடுகின்றார்கள் என்று இலங்கை அரசாங்கம் தான் கூறுகின்றது மக்களுக்குள் பலமாக இருக்கின்ற கட்சியை உடைப்பதற்குரிய வேலைகளை அரசாங்கம் செய்து வருகின்றது.

நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. இதனைநீக்காமல் மேலும் கொடிய சரத்துக்களை உட்புகுத்தி அதனை வைத்திருப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.

இலங்கையில் உள்ள எந்த தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியை வழங்க தயாராகவில்லை. இந்த நிலையில் தான் மிக பலமான ஒரு கட்சியாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு இருக்கின்றது.

மக்களுடைய பிரச்சனைகளை ஒன்றாக இணைந்து பேசுகின்றார்கள் இதனை உடைப்பதற்கு முதலமைச்சரையும் தமிழ்தேசியக்ககூட்டமைப்பையும் இடையில் கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்துவது இவ்வாறு கட்சிக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்துவது இப்படியே பல வேலைகளைச் அரசாங்கம் செய்துவருகின்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் தலைமைகள் விவசாயிகளிடம் பேசிக்கொள்ளவேண்டும் தண்ணீரைக் கொண்டு போவதற்கு தலைகீழாக நிற்பதை விட இங்குள்ள சூழல் என்ன என்பதை பேசிக்கொள்ளவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்