காணாமால் போனோர் மற்றும் விடுவிக்கப்படாத அரசியல் கைதிகள் தொடர்பில் விசேட சந்திப்பு

காணாமால் போனோர் மற்றும் விடுவிக்கப்படாத அரசியல் கைதிகள் தொடர்பிலான சந்திப்பொன்று அவர்களின் பிரதிநிதிகள் இன்றைய தினம் அலரிமாளிகையில் பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தன,சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, நீதித்துறை அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ மற்றும் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன் அவர்களுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் இரத்தினவேல் தலைமையில் 15 பேர்கள் கொண்ட பிரதிநிதிகளும் பங்குபற்றி இருந்தனர்.
இப்பிரதி நிதிகள் அரச தரப்பினரோடு தனியாக பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் எனக்கோரிக்கை வைத்தனர்.
பல்லாயிரக்கணக்கான காணாமல் போனோரைப் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்ட சில காணாமல் போனோரின் பிரதிநிதிகளை மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது.

பல்லாயிரக்கணக்கான காணாமல் போனோர் பற்றியும் பேச வேண்டி இருப்பதால் தனிப்பட்டவர்களின் பிரச்சினைகளைப்பேசி அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான களமாக இதனைப் பயன்படுத்த முடியாது என கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.