கிளிநொச்சி டிப்போச்சந்தி மற்றும் கரடிப்போக்குச்சந்தியை அண்மித்த பகுதிக்கும் இடையில் சுற்றுவட்டங்களை அமைக்க கோரிக்கை – சிவஞானம் சிறிதரன்

கிளிநொச்சி டிப்போச்சந்தி மற்றும் கரடிப்போக்குச்சந்தியை அண்மித்த பகுதிக்கும் இடையில் சுற்றுவட்டங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஏ-9 வீதியில் டிப்போச்சந்தி முதல் கரடிப்போக்குச்சந்தி வரைக்குமான பகுதி அதிக வாகன நெரிசல் கொண்ட பகுதியாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில் டிப்போச்சந்திப்பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றினை அமைத்து மின் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என்றும் கரடிப்போக்கு சந்திக்கும் கந்தசுவாமி கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் முடக்கு திரும்பல் அமைக்கப்பட வேண்டும் என்றும் கடந்த டிசம்பர் மாதம் 24ம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என வர்த்தகர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு கடந்த டிசம்பர் மாதம் 24ம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கரைச்சிப்பிரதேச செயலாளர் வர்த்தக சங்கம் ஆகியோருக்கு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கடிதங்களை சிவஞானம் சிறிதரன்அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் டிப்போச்சந்தியில் சுற்று வட்டம் அமைத்தல் மற்றும் கரடிப்போக்குச் சந்திக்கும் கந்தசுவாமி கோயிலுக்கு இடையில் வாகனங்கள் திரும்பிச் செல்லக்கூடிய முடக்கு திரும்பல் அமைத்தல் போன்ற இரண்டு விடயங்களையும் கவனத்திற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இவ்விடய முன்னேற்றம் பற்றி தனக்கு அறியத்தருமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.