3

முல்லைத்தீவில் நில மீட்புக்காக நடைபெற்று வரும் இரு போராட்டங்களுக்கும் த.தே .கூ தீர்வினை பெற்றுத்தரும் .- சிறிதரன்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலவு குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படுவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உரிய பதில் தரவில்லை என்றும், இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அவசர கலந்துரையாடல் ஒன்றினை நடத்ததுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு முனைந்துவருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தகவல் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இரண்டு நில மீட்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கேப்பாப்பிலவு மற்றும் பிலவுக் குடியிருப்பு மக்கள் கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போன்று புதுக்குடியிருப்பு மக்களும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி நேற்று முதல் சுழல்ச்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இரு போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் நேற்று இரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கர் சிவஞானம் சிறிதரன் சந்தித்திருந்தார்.
இதன் போது போராட்டக் கார்கள் முன்னிலையில் இருந்து எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தனுடன் அலைபேசியூடாக தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் போராட்டக் காரர்களின் அவல நிலை தொடர்பில் அவருன் பேசியிருந்தார்.

இதன் போது முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்;பட்டுவரும் நில மீட்புப் போராட்டம் தொடர்பாக பிரதமர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் இரு முறை நான் பேசியுள்ளேன். இருப்பினும் அப் பேச்சுவாத்தைகளின் எந்த பயனும் இல்லை. சாதகமான பதிலை பிரதமர் தரவில்லை.

இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இவ்விடயம் தொடர்பாக அவசரமாக கலந்துரையாடவுள்ளோம் என்றார்.

சம்மந்தரின் தகவலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஜனாதிபதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் பேச்சுவார்த்தையின் போது, காணி விடுவிப்புத் தொடர்பாக இறுக்கமாக வலியுறுத்தல்கள் செய்யப்படும்.

மக்கள் போராட்டம் வெற்றிபெற வேண்டும். மக்களது நியாயமான போராட்டங்கள் வெற்றி பெறுவதற்கான முழுமையான ஒத்துழைப்பினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கும். முல்லைத்தீவில் நில மீட்புக்காக நடைபெற்று வரும் இரு போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கான தீர்வினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுத்தரும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மேலும் தெரிவித்தார்.

1

2

3

4

5

6

7

8