சிங்கள மக்களும் முனைப்புடனேயே இருக்கின்றனர்: சுமந்திரன் எம்.பி

புதிய அரசியலமைப்பில் அதிகார பகிர்வு குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாட தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 70 ஆண்டு காலமாக நாட்டில் நீடித்துள்ள இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற முனைப்பு சிங்கள மக்களிடத்தில் இருக்கின்றது.

இந்நிலையில், புதிய அரசியலமைப்பை சிங்கள மக்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகார பகிர்வு, பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் தேர்தல் முறைமை என்பன குறித்து அனைவரும் ஏற்றுக்கொள்ளகூடிய வகையில் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.

இதேவேளை, புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அமுல்படுத்த வேண்டும். அவ்வாறில்லாது, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.