அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் அர்த்தம் இல்லை – த.தே.கூ

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிடின் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் அர்த்தம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் மத்தியில் இதுவே பொதுவான கருத்தாக இருப்பதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.