மன்னாரில் தனியார் காணியை அபகரித்து விகாரை கட்ட அனுமதி!

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் காணிகள் அபகரிக்கப்பட்டு வரும் நிலையில், தொல்பொருள் திணைக்களமும் மக்களின் காணிகளை அபகரித்து வருகின்றது.

இந்நிலையில், அண்மையில் மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் தனியார் காணியொன்றை அபகரித்த தொல்பொருள் திணைக்களம் அக்காணியில் மூன்று ஏக்கரினை புத்த விகாரை அமைப்பதற்கு வழங்கியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்கு இடையூறாக நாட்டில் காணப்படும் பயங்கரவாத பிரச்சினையை அரசாங்கம் காரணம் காட்டியதாவும் யுத்தம் நிறைவுபெற்று 8 வருடங்கள் கடந்துள்ள போதிலும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை எனவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.