காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஐனாதிபதியுடன் சந்திப்பு !!

கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மற்றும் பரவிப்பாஞ்சான் மக்களின் காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஐனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரச படையினரிடம் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு – கேப்பாபுலவு, மற்றும் கிளிநொச்சி–பரவிப்பாஞ்சான் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அத்துடன் பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்றைய தினம் இராணுவத்தினருடன் நடாத்திய பேச்சுவார்த்தையில், காணிவிடுவிப்பு தொடர்பாக சாதகமான பதிலை வழங்குவதாக இராணுவத்தினர் அறிவித்திருந்தனர். இந்தநிலையிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐனாதிபதியை இன்று சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.