என்னைப் பற்றி தவறான செய்திகளை வெளியிடவேண்டாம் – வடக்கு மாகாண முதலமைச்சர்!

தன்னைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பவேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உடகங்களிடம் தெரிவித்துள்ளார். ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் கடுமையான சுகவீனமடைந்துள்ளதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியமை தொடர்பாக தனது ஊடக இணைப்பாளர் ஊடாக குரல் பதிவொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் இரத்த குழாய்களில் உள்ள அடைப்புக்கள் தொடர்பாக வைத்தியர்கள் தன்னை பரிசோதிக்க உள்ளதாகவும், அதனைத் தவிர பாரதூரமான நிலமைகள் எதுவும் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தான் பாரதூரமான நோய்க்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும், இரண்டு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லையெனத் தெரிவித்துள்ளார்.

விரைவில் தான் பணிக்குத் திரும்பவுள்ளதாகவும், தன்னைப் பற்றி தவறான செய்திகளை வெளியிடவேண்டாம் எனவும் ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.