qqe

வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையில் இன்று கூட்டம்

வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையில் இன்று கூட்டம் நடைபெறவுள்ள மண்டபத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் எதிர்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இக்கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேவேளை கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கூட்டம் நடைபெறவுள்ள விருந்தினர் விடுதி மண்டபம் விசேட அதிரடிப்படையால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
2e

34

56

123

q3

qqe