காணிகளை விடுவிப்பது தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் – சிவஞானம் சிறீதரன்

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செலயகத்திற்குட்பட்ட கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு தாங்கள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் நீடித்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனக்கருதி பெரும் சிரமத்திற்கு மத்தியில் அந்த போராட்டத்தை நிறுத்தியதாகவும் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு அதியுச்ச அணுகுமுறைகள் ஊடாக குறித்த காணிகளை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
r

r6