நாங்கள் எதையும் இழந்து போன இனம் அல்ல – சிவஞானம் சிறிதரன்

நாங்கள் எதையும் இழந்து போன இனம் அல்ல. அழிவுகளிலிருந்து நிமிர்ந்து எழுகின்ற இனம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி புனித பெண்கள் திரேசா கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அமர்வுகள் நேற்று (13-03-2017) பகல் 1.30 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

கல்லூரியின் அதிபர் அன்ரனிசாந்தா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமவிருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் நாங்கள் முற்பது ஆண்டுகள் பொய்யாக வாழவில்லை.

அதன் வரலாறுகளை இன்று மாணவர்களாகிய நீங்கள் பார்க்கீன்றீர்கள்,நாங்கள் மறந்து வாழுகின்ற ஒரு இனமல்ல. அல்லது நாங்கள் எதையும் இழந்து போன இனமும் அல்ல. அழிவுகளில் இருந்து நிமிருகின்ற இனம். ஒவ்வொரு காலமும் நாங்கள் அழிந்திருக்கின்றோம். அது இப்போது மட்டுமல்ல. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அழிந்து பிறந்திருக்கின்றோம்.

ஆனால் நாங்கள் இப்படி இருக்கலாம். நாளை இதனை கையில் எடுக்கின்ற காலம் ஒன்று வரும். துப்பாக்கிகள் மாத்திரம் வெற்றிகளை பெற்றுத்தருவதல்ல. ஆனால் துப்பாக்கிகளை யாரும் தூக்கமுனைந்தால் அதனை தடுக்கமுடியாத காலங்கள் வரும் நாங்கள் சொல்லி தூக்குவதுமல்ல. அல்லது நாங்கள் சொல்லி அது தூக்காமல் விடப்படுவதுமல்ல.

1983ம் ஆண்டுகளில் இளைஞர்கள் எல்லாம் வசதியாக இருக்கின்றபோது தான் அவர்கள் துப்பாக்கிகள் பற்றி சிந்தித்திருக்கின்றார்கள்.

அப்போது இருந்த வசதிகள் இருப்பதாகத் தெரியவில்லை.அப்போது இருந்த வசதிகளிலேயே இனம்பற்றி சிந்தித்திருந்தார்கள். ஆனால் இப்போது இருக்கின்ற வசதிகள் என்பதற்கு அப்பால் இருக்கின்ற வசதிகளுக்கு இவ்வாறு அழகான ஒரு நேர்த்தியான ஜனநாயகப்பண்பையும் மாணவர்களின் தலைமைத்துவ ஆழுமையையும் இந்த மாணவர் பாராளுமன்ற அமர்வில் பெற்றுள்ளார்கள் என்றார்

1

2

2e

3

4

4es

5

6

7

8

9

10

11

12

13

67

sri

ui