மீள்குடியேறும் உரிமைதடுக்கப்பட்டமை அடிப்படை உரிமையைப் பறிக்கின்றசெயல் -சிவஞானம் சிறிதரன்

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னாள் ஜனாதிபதிமஹிந்தராஜபக்ச காலத்தில் பலஜனநாயகவழிப்போராட்டங்களைநடத்தி தமது கோரிக்கைகளைமுன்வைத்தபோதும் அவர்களின் மீள்குடியேறும் உரிமைதடுக்கப்பட்டமைஅவர்களின் அடிப்படைஉரிமையைப் பறிக்கின்றசெயலாகஅமைந்திருந்தது.என பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் ஜனாதிபதிக்கு இன்று(14-03-2017) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவுமாவட்டத்தின் கரைதுறைப்பற்றுபிரதேசசெயலர்பிரிவில் அமைந்துள்ளகேப்பாப்புலவுகிராமமக்கள் தமதுகாணிகளைவிடுவிக்குமாறுகோரிதொடர்ச்சியாகமுன்னெடுத்துவரும் ஜனநாயகவழிபோராட்டம் தொடர்பில் தங்கள் விரைவானநடவடிக்கையினைஎதிர்பார்த்து இக்கடிதத்தைஎழுதுகின்றேன்.
மேற்படிகிராமத்தில் 186குடும்பங்கள் தமக்குச்சொந்தமான485ஏக்கர்காணியில் ஏழு தலைமுறைகளாகவாழ்ந்துவந்திருக்கிறார்கள்.2008.11.24இறுதியுத்தம் நடைபெறும் வரையில் குறித்தகாணிகளில் வாழ்ந்தமக்கள் மீள்குடியேற்றத்தின்போதுஅவர்கள் மீள்குடியமரபலவந்தமாகதடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிமஹிந்தராஜபக்ஷ காலத்தில் பலஜனநாயகவழிப்போராட்டங்களைநடத்திகோரிக்கைகளைமுன்வைத்தபோதும் அவர்களின் மீள்குடியேறும் உரிமைதடுக்கப்பட்டமைஅவர்களின் அடிப்படைஉரிமையைப் பறிக்கின்றசெயலாகஅமைந்திருந்தது.
தற்போதுதங்களதுநல்லாட்சிஉருவாக்கப்பட்டபோதுஉங்கள் மீதுஅந்தமக்கள் கொண்டிருந்தநம்பிக்கைஅதிகமானது. நீதிபுரளாதுநேர்மையானமுறையில்தங்களின் நியாயமானஉரிமைகிடக்கும் என்றுகேப்பாப்புலவுமக்களும் நம்பிக்கைகொண்டிருந்தனர். ஆனால் தங்களதுகுடும்பத்தினரோடுநடுத்தெருவில்இரவுபகலாககுந்தியிருக்கவும் உணவுதவிர்த்துபோராடவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமைமிகுந்தவருத்தம் அளிக்கிறது. போராடித்தான் சொந்தக்காணிகளில் குடியேறவேண்டும் என்றமக்களின் தலைவிதியைஉண்மையானபௌத்தனாக இருந்துசிந்தித்துபாருங்கள்.
கேப்பாப்புலவுமக்கள் குறித்தகாணிகளைதமதுவாழவிடமாகமட்டுமன்றி ஜீவனோபாயநிலமாகவும் பயன்படுத்திவந்தனர். 135குடும்பங்களின் சீவியம் அந்தநிலத்தில்த்தான் தங்கியிருந்தது. அந்தமண்ணில் மேற்கொள்கின்றவிவசாயத்தால் மாத்திரமேஉணவுகல்விஉட்பட்டஅனைத்துத்தேவைகளையும் சிறியஅளவில் நிறைவுசெய்தனர். மேலும் 55 குடும்பத்தினர்நந்திக்கடலையேதமதுவாழ்வாதாரமாககொண்டிருந்தனர்.

நந்திக்கடலின் மேற்குக்கிழக்குகரைகளில் கரையோரமீன்பிடித்தலுக்குஅனுமதிஅளித்துள்ளபோதிலும் நந்திக்கடலின் மத்தியபகுதிமுழுவதும் இராணுவவலயத்தினுள் அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நண்டு இறால் போன்றபொருளாதாரப்பயன் அதிகரித்ததொழிலைசெய்யமுடியாதவகையில் குறித்தமக்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.
போதியஅளவுஉட்கட்டமைப்புவசதிகளோடு இம் மக்கள் அங்குவாழ்ந்தார்கள். குறிப்பாகஅரசாங்கப்பாடசாலைஆரம்பசுகாதாரநிலையம் பொதுநோக்குமண்டபங்கள் இந்துகிறிஸ்தவஆலயங்கள் பொருளாதார இயற்கைவளங்கள் என்பனஅம்மக்கள் பூர்வீகமாகவாழ்ந்தகலாச்சாரவாழ்வைஅடையாளப்படுத்துகின்றன.

ஆந்தவாழ்விடங்களைபார்த்துஏங்கித்தவித்தவாறு இடமற்றுவாழ்கின்றகுறித்தமக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பைதயவுசெய்துபுரிந்துகொள்ளுங்கள் எனக்கேட்டுக்கொள்கின்றேன்.
கௌரவ ஜனாதிபதிஅவர்களே! கேப்பாப்புலவுமக்கள் கடந்தபலவாரங்களாக ஜனநாயகவழியில் போராடிவருகிறார்கள்.

வுலிகாமத்தின் சிலபகுதிகளையும் சம்பூர்பிலக்குடியிருப்புபரவிப்பாஞ்சான் புதுக்குடியிருப்புஎன்பவற்றில் நடைபெற்றமக்களின் நீதியானபோராட்டங்களைஅடுத்துஅந்தமக்களுக்குகாணிகளைத்தாங்கள் கையளித்தமைகேப்பாப்புலவுமக்களையும் தங்கள் மீதுஅதிகநம்பிக்கைவைக்கச்செய்திருக்கிறது. கடந்தஐந்துநாட்களாகதொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களில் இருவர்உணவுதவிர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டுமயக்கமும் சோர்வும் அடைந்திருந்தனர்.

இந்நிலைநீடித்தால் ஒருசிலதினங்களில் அவர்களின் உயிருக்குஆபத்துநிகழும் எனக் கருதிஅவர்களின் உணவுதவிர்ப்புப்போராட்டத்தைஅவர்களின் எதிர்ப்புகளுக்குமத்தியிலும் தற்காலிகமாககைவிடசெய்துள்ளோம்.

எனவேஉணர்வுபூர்வமானநிலையில் தமதுவாழ்விடஉரிமைக்காகபோராடுகின்றமக்களின் நோக்கம் நீதியானது. ஆகவேதாங்கள் இவ்விடயத்தில் நேரடியாகதலையிட்டுஅதிஉச்சஅணுகுமுறைகள் ஊடாககுறித்தகாணிகளைவழங்கிஉதவுமாறுபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏன அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.